வாழ்க்கைப் பயணம்
பிறப்பாய், பிறந்தது தெரியாது, தினம்
வளர்வாய், வாழ்க்கை புரியாது !
வாழ்க்கை என்பது கருங்கோடு, அதில்
வளைவுகள் இருப்பது தெரியாது !
பெண்ணினம் குறுக்கிடும் சிரிப்போடு, மனம்
பின்செல்லும் அவளது நினைப்போடு !
நாளும் பொழுதும் விரைந்தோடு, பணம்
நிறைந்தாலும் உழைத்திடு பணிவோடு !
வெற்றியை வெட்டிடு சிரத்தோடு, வரும்
இறுதியை அணைத்திடு சிரிப்போடு !
பிறப்பாய், பிறந்தது தெரியாது, வாழ்வை
முடிப்பாய் வென்றிட்ட செருக்கோடு!!