சூரியனே உதிக்காதே

சூரியனே உதிக்காதே!!........
கயிற்றில் நடந்து நடந்து
கால்கள் ஓய்ந்தன.....
கலையை பிடித்து பிடித்து
கைகள் தேய்ந்தன......
சூரியனே உதிக்காதே!!........
தலைகவசம் வரம்
என் தலை கலசம் தரும் ஜுரம்!!......
சூரியனே உதிக்காதே!!........
பற்றி எரிகிறது!!.....
பாலாய்ப்போன என் வயிறு......
உன் சூட்டில் வெந்து!.. வெந்து!...
சும்மா கெட......
என்னய மாதிரி சொரணை இல்லாம!!....
சூரியனே உதிக்காதே!!........
சிறுவர் பூங்காவிலே ஆரம்பித்து .....
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மையத்தின்
கதவை தட்டி... தட்டி... ஓய்ந்து!!.......
பொழுது சாய
நிலா முற்றத்திலே
நீதி கேட்டு நின்றிருக்கிறேன்!!....
சூரியனே உதிக்காதே!!........
(வசூல்) கைதட்டும்!!....
(வசூல் )தலையில் கொட்டும்!!....
சூரியனே உதிக்காதே!!........
என் ஆடையில் ஓட்டைகள் அதிகம்
அவர்கள் பார்வையின்
பலான சேட்டைகள் போல!!...
ஆகாய சூரியனே!!அதிகாலையில் உதிக்காதே!!...
எனக்கு வயது ஈராறு
அய்யா!!... ஆகாய தாமரையே!!...
எனக்காக மனம் மாறு!!...
அரைநாள் விடுப்பு !!...
கொடுப்பது உன் பொறுப்பு!!!...
ஏன் இந்த மிடுக்கு
என் இடுப்பு டான்ஸ் பார்க்க
உனக்கும் கூடவா இருக்குது துடிப்பு!!....
சூரியனே உதிக்காதே!!........
இனி ஒரு கறுப்புக் காந்தி என் விடுதலைக்காய்
வீட்டுச் சிறை செல்வாரா!!...
மலாலாவின் நிறலாவது
மதுரையில் படுமா!!....
ஸ்நோடன் வருவாரா!!...
பில்கேட்ஸ் தருவாரா!!....
லோக்பால் என்ன செய்யும்!!....
ஹசாரே என்ன செய்வார்!!...
ஆம் ஆத்மி
கூ ஆர் வித் மீ ?!....
சூரியனே உதிக்காதே!!........
"அவமானம்" எனக்கு
தினமும் கிடைக்கும் "வெகுமானம்"!!...
அழுக்கு என் ஆடையிலும்
அவர்கள் பார்வையிலும்!!...
நீரோ
எங்க
எஜமான்கிட்ட
ஜீரோ!!....
சூரியனே உதிக்காதே!!........
பால் தரும் மாடுகளை
கோமாரி நோய் தாக்குகிறதே!!....என் வாழ்வை பாழாக்கிய மனிதர்களை என்ன நோய் தாக்கும்!!....
யானைக்கு புத்துணர்வு முகாம்
அம்மா தாயே எங்களுக்கு?!....
நலவாரியம்!... நலவாரியம்!!...
என்றீர்களே தலைவரே!...
எங்கே இருக்கிறது நலவாரியம்!!....
அச்சமில்லை!..அச்சமில்லை!..
பாடினான் பாரதி
இனியும் உண்மை கூறும்
துனிச்சல் துளியுமில்லை!!...
சூரியனே உதிக்காதே!!....
சொரணை சிறிதும் இல்லாத
மனிதர்கள் வாழும்
இந்த மண்ணை மிதிக்காதே!!....