மாற்றங்கள் தேவையில்லை

இருப்போம்
நீ நீயாக ,
நான் நானாகவும் ..
மாற்றங்கள் தேவையில்லை! இணைந்திருக்க.
மறதிகள் தேவையில்லை , மன்னிப்புகள் போதும்!
அணைப்புகள் தேவையில்லை , அன்பு போதும்!
புறக்கணித்தல் வேண்டாம் , கொஞ்சம் புன்னகை போதும்!
இயல்புகள் இழந்து
உன்னை தொலைத்து
எனக்காக நீ மாறுவதில் உடன்பாடில்லை எனக்கு!
நீ நீயாக ,
நான் நானாகவும் .. இருப்போம்.
மாற்றங்கள் தேவையில்லை, இணைந்திருக்க!