வழிகாட்டுங்கள்
மலரில் நான் எழுதுகிறேன்
தேன் இருந்தால்
வாழ்த்து பெறுகிறேன்.
தேள் இருந்தால்
விஷத்தை தருவீர்களா ?
விஷயத்தை புரியவைப்பீர்களா ?
கம்பனின் பேரன்
நான் அல்ல
காட்டுவாசியின் நவீன
பிம்பம் நான்.
கண்ணாடியாக இருங்கள்
கண்டித்து சொல்லுங்கள்.
நக்கீரர் நீங்கள் என்றால்
விமர்சன குளத்தில்
மூழ்க நான் தயார்.
நண்பர்கள் நீங்கள் என்றால்
இதய குளத்தில்
தாமரையாக நான் தயார்.
உருக்கப்படாத இரும்பு நான்
என்னை உருக்கி
அரிவாள் செய்து விடாதீர்கள்.
அறிவால் தண்டவாளம் செய்யுங்கள்
என் மீதான
உங்கள் நட்பு பயணம்
என்னால் சிறக்கட்டும்.
(மீதம் அடுத்த வாரம்_