இறுதி தேர்வு பட்டியல் குறித்து ஒரு சில விடயங்கள் கூற விரும்புகிறேன் !
கடந்த சில மாதங்களாக அறிவிக்கப்படும் இறுதி தேர்வுப் பட்டியல்கள் குறிப்பிட்ட ஒரு பத்து படைப்பாளிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் தாங்கி வருகிறது ! இது தளத்தின் கீர்த்திநாமத்திற்கு ஏற்படும் பெரிய இழுக்கு என்பதை அக்கறையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் !
பதினேழாயிரம் பேர் வரை அங்கத்தவர்களாய் இருக்கும் இந்த தளத்தில் இப்படி ஒரு பத்து பேர்களை மட்டுமே மீள் சுழற்சி முறையில் இறுதி தேர்வுப் பட்டியலுக்கு அறிவித்தல் என்பது சரியான முறையல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
எத்தனையோ நட்பு வட்டங்கள் தங்கள் கருத்தினை இங்கே பகிர்ந்துள்ளார்கள். கலையின் இந்த கட்டுரைக்கு நான் உடனேயே என் கருத்தினை பகிர நினைத்தேன். அனால் பிறர் என்ன தெரிவிக்கிறார்கள் என்பதை அறியும் நோக்கத்திலும் இங்கு இதற்கு ஓரிரு வரிகளில் பதில் அளிக்க இயலாத காரணத்தினாலும் இந்த கருத்து தாமதம்.
இருப்பது அப்படியே இருக்கட்டும் என்று நினைப்பதில் இல்லை ஒன்றின் வளர்ச்சி. அவ்வப்பொழுது எப்படி மாற்றி அமைக்கலாம். அது எவ்விதத்தில் சிறக்கும் அல்லது வளர்ச்சியுறும் அதற்கான செயல்பாடுகளும்தான் எந்த ஒன்றையும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். இங்கு உள்ள நடைமுறைகளும் மாற்றி அமைக்கப் படுமாயின் இத்தளம் இன்னும் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனக்கு தெரிந்த சில கருத்தினை இங்கே உங்களிடத்திலும் தளத்தினரின் பார்வைக்காகவும் இங்கே சமர்பிக்கிறேன்.
இத்தளத்தில் ஒரு வாரத்திற்கு சுமார் 1350 படைப்புகள் மற்றும் ஒரு மாதத்திற்கு தோராயமாக 6000 படைப்புகள் சமர்பிக்கப் படுகின்றன. இதில் கவிதைகள், கதைகள், நகைச்சுவை, கட்டுரைகள் ஆகிய அனைத்தும் அடங்கும். இவற்றிலிருந்து நல்ல படைப்புகளை ஓரிருவர் மூலமாக தெரிவு செய்தல் என்பது இயலாத காரியம்.
முன்பு ஆவாரம்பூ அவர்கள் வாரம் ஒரு முறை கவிதைகளை தெரிவு செய்து அறிவிப்பதற்கு எவ்வளவு சிரமப் பட்டுப் போனார்கள் என்பது எனக்கும் அவர்களுக்கும் இன்னும் பிற தெரிவுக் குழுவினர் அறிந்திருப்பர். அப்பொழுது தெரிவுக் குழுவில் 7 பேர் நடுவராக இருந்தனர். படைப்புகள் நாளொன்றுக்கு சுமார் 100 லிருந்து 125 கவிதைகள் வரை வரும். ஒவ்வொரு நடுவரும் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட கிழமைகளில் மட்டும் உள்ள கவிதைகளை தெரிவு செய்து கொடுப்பது எவ்வளவு பெரிய காரியம் என்று அந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கே அது தெரியும்.
ஒரு அளவிற்கு மேல் அவர்களாலும் இந்த பணியை செய்ய இயலாது போனதால்தான் இந்த தெரிவு முறை கைவிடப் பட்டது.
இப்பொழுதோ உறுப்பினர்களும் அதிகம். படைப்புகள் மிக மிக அதிகமாகிவிட்டது. தேர்வு செய்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அவ்வாறு தேர்வு செய்யாமலும் போகும் பட்சத்தில் இங்கு படைப்புகளுக்கு கிடைக்கும் பார்வைகளும், மதிப்பெண்களும், வாக்குகளுமே ஒரு தரமற்ற படைப்பைக் கூட பரிசுக்குரியதாக மாற்றிவிடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும் இனி. மேலும் எவ்வளவோ நல்ல படைப்பாளிகள் மிக நல்ல கவிதைகளை இங்கு அளிக்கிறார்கள். பிறருக்கு அவர்கள் கருத்துப் போட வர இயலாது போகும் பட்சத்தில் அவர்கள் கவிதை பக்கம் எவரும் செல்வதில்லை (ஒரு சிலரைத் தவிர) என்பதே நான் கண்டது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு புதிய மற்றும் நல்ல படைப்பாளிக்கு எழுதுவதில் உற்சாகக் குறைவு கூட ஏற்பட்டு இத்தளத்தை விட்டு விலகவும் செய்யலாம். இதற்கு நான் ஒருவரை உதாரணம் கூட சொல்ல இயலும். பெ. கார்த்திக் இங்கு படைப்புகளை அளித்து ஆரம்ப காலத்தில் பரிசு வென்றிருந்தாலும் அடுத்து அடுத்து அவரது கவிதைகள் பார்வை அற்று கிடந்திருக்கிறது. நான் அந்த பிள்ளையை நேரில் சந்தித்திருக்கிறேன் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு சென்றிருந்த சமயம். அருமையாக எழுதக் கூடிய பையன். தளத்தில் இப்பொழுது எழுதுவது இல்லை.
முன்பு ஆவாரபூ நடத்தி சென்றது போல் யாரேனும் ஒருவர் இந்த கவிதை தெரிவுகளை முன் இருந்து நடத்தினால் நல்ல கவிதைகளுக்கு பரிசுகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தெரிவு செய்வதற்கு எழுவரால் மட்டும் இயலாது. இதனை இன்னும் அதிகப் படுத்தி 14 பேர்கள் கொண்ட குழுவாக்கி ஒரு நாளில் வந்து விழும் படைப்புகளை இருவர் வீதம் தெரிவு செய்வார்கள் என்றால் (அதாவது அதிகாலை 12.01 லிருந்து மதியம் 12.00 வரை ஒருவர். மதியம் 12.01 லிருந்து இரவு 12.00 வரை ஒருவர்) தேர்வு செய்தல் என்பது சாத்தியப்படும். இங்கு நிறைய கவிதை வல்லுனர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 14 பேர்களை அடையாளம் காணுதல் என்பது அவ்வளவு சிரமமில்லை.
மேலும் இத்தளத்தினருக்கு என் கருத்தினை கூற விழைகிறேன். இங்கு அனைத்து படைப்புகளும் அதாவது கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை அனைத்தும் அடுத்தடுத்த படைப்பு வரிசை எண்களை தாங்கி வருவதால் இதில் கவிதைகளை மட்டும் அல்லது கதைகள் மட்டும் என்று கண்டு கொள்ளுதல் மிகவும் சிரமமான காரியம். கவிதைகளுக்கு ஒரு தொடர் எண்ணும், கதைகளுக்கு, நகைச்சுவைகளுக்கு என்று தனித் தனியே தொடர் எண்கள் தரப்படும் வகையில் software இல் மாற்றங்கள் செய்யப் படும் என்றால் இந்த தெரிவு முறை கொஞ்சம் சுலபப் படும். எல்லாம் ஒரே பிரிவில் வந்து விழுவதால் பிரித்து தெரிவு செய்வது என்பதும் கடினம்தான். தளத்தினர் இந்த மாற்றத்தினை செய்து கொடுக்கும் பட்சத்தில் தெரிவு செய்வதும் எளிதாகும்.
மேலும் இங்கு ஒன்றை கூற விழைகிறேன். இங்கு தேர்வுக்குரிய கவிதை பட்டியல் வெளி வந்தவுடன் இங்கு ஒரு ஆட்டமே நடக்கிறது. பரமபதம் போன்று. இதற்கு ஒரு கவிதையே நான் எழுதி வைத்திருக்கிறேன். பதிவிடுகிறேன். வேண்டியவர் கவிதைகளுக்கு சிறந்ததோ இல்லையோ கணக்கில் இல்லை, வாக்குகள் அளிக்கப் பட்டு அதிக வாக்குகள் பெறும் கவிதைகள் ஏணியில் ஏறுவது போல் ஏறிவிடுகிறது. (நல்ல வேளை முன்பு போல் மைனஸ் மதிப்பெண்கள் இல்லை. இருந்திருந்தால் இன்னும் கோரதாண்டவம்தான்). வாக்குகள் பெற இயலாத நல்ல கவிதைகள் கூட பாம்பில் இறங்குவதுபோல் தடாலடியாக இறங்கிவிடுகிறது. இது மன வருத்தத்தை அளிக்கிறது. இப்படி வெளிப்படையாக வாக்குப் பதிவுகள் நல்லதே என்று நினைக்கத் தோன்றினாலும் ஒருசிலருக்கு இது விளையாட்டாகவே ஆகிவிடுகிறது அதாவது வேண்டாதவர் கவிதையை கீழே தள்ளி விடுதல். வாக்குப் பதிவுகள் வெளிப்படியாக இல்லாமல் வாக்கு மட்டுமே வெளிப்படியாகவும் சதவீகிதம் மறைவாகவும் வைக்கப் படுமென்றால் இந்த பரமபத விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். தளத்தினர் இதனை தயவு கூர்ந்து கவனிக்கவும்.
என்னால் கூற முடிந்த எனக்கு நல்லது என்று பட்ட என் கருத்தினை நான் இங்கு முன் வைத்திருக்கிறேன். நல்ல கவிதைகளுக்கு பரிசுகள் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணமும்.
அன்புடன்,
சாந்தி. 04-Jan-2014 7:25 pm
நல்ல கட்டுரை தோழமையே இதை எழுத்து தளமும் மற்றவர்களும் ஏற்று கொள்வார்கள் என நம்புகிறேன் .... வரவேற்கவேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி ... 04-Jan-2014 4:11 pm
புள்ளிகள் அதிகம் கிடைக்கப்பெற்று கணணி தேர்வாக்கும் கவிதை முதலிடம் பிடிக்கும் பட்சத்தில் புள்ளிகள் கிடைத்தால் நமது கவிதை நல்ல கவிதை என்ற மமதையால் படைப்பாளியின் முன்னேற்றம் முட்டுக்கட்டை ஆகிவிடககூடாதென்பது கலையின் அக்கறையாக இருக்கலாம் அல்லவா? 03-Jan-2014 3:41 pm