Cholan- கருத்துகள்



அடடே ஏனப்பா அடிச்சுக்கிறீங்க.
பரிசு தானா உங்க பிர்ச்சினை ? கடந்த சில மாதங்களுக்கு முன் கலையும் நட்புகளின் புள்ளி அர்ச்சனையால் பட்டியலில் அதிகமான இடங்களை பெற்றார். இப்போ என்னமோ காரசாரமா பேசுறார். இப்போ இருக்கும் இறுதி பட்டியலில் இருப்பவர்களின் படைப்புக்கள் தரமற்றது என்று சொன்னால் , கலையும் இதே போன்று அவ்வப்போது இந்த இறுதிபட்டியலில் இருந்திருக்கிறார். இருப்பார். அதற்காக கலையின் படைப்பு தரமற்றது என்றாகி விடுமா?.

ஏதோ தமிழ் தெரிஞ்சவங்க ஆசையா எழுத வராங்க, நட்பா இருக்காங்க, உற்சாகப்படுத்த கருத்து போடுறாங்க, அவங்களுக்கு பிடிச்சவங்களுக்கு அவங்க புள்ளி வழங்குவது அவங்க இஷ்டம். அதுக்காக நண்பர்கள் புள்ளி கொடுத்து முன்னுக்கு வரும் படைப்பு எல்லாம் தரமில்லைன்னு இவரு யாரு அத சொல்ல ?
பட்டியலில் இருக்கும் படைப்பாளிகளையும் அவர்களுக்கு கருத்திட்டவர்களையும் குற்றவாளிகள் போல கட்டுரை எழுதுவது எந்த முறையில் நாகரீகம்.

நேற்று ஒரு குழு இருந்தது.
இன்றோ வேறு ஒரு குழு. இதை விட வலுவாக இன்னொரு குழு வரும். ஆனால் எல்லாம் நட்பு குழக்களே. நட்பு என்றால் எல்லாரும் வாரி வழங்கும் வள்ளல்கள் தான். கொடுத்து வாங்கும் சுயநலமும் இருக்கும். அல்லது இதில் விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு

தெரிஞ்சவங்க, சொந்தகாரங்க, நண்பர்கள் என்று நடுநிலையாளர்களை விட்டு புள்ளி இட்டு தரம் ஆராய்ந்தால் அது நேர்மையாக இருக்கும் என்பதற்கு எந்த அளவு உத்திரவாதம் ?

நடுநிலையாளர்களின் சர்வதிகாரத்தில் படைப்புக்கள் கவனிக்கப்பட்டால் , கண்டிப்பாக படைப்புகளின் எண்ணிக்கை குறையும், உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும். தளத்தின் பிரபலம் குறையும்


இந்த இணையதளம் ஒன்றும் இலக்கியம் போற்றும் களம் அல்ல, முகப்பக்கத்தை போல நண்பர்கள் உறவாடும் சமுதாய தளம்தான் .

பரிசு என்ன பெரிய பரிசு.? எழுதிறீங்க. வாசியுங்க, உற்சாகப்படுத்துங்க போதும்.

இந்த புள்ளிகள் , பரிசு முறை கூட இணையதளம் நம்மை பந்தயத்தில் ஓடவிட்டு தளத்தின் வளர்ச்சிக்கு நிர்வாகம் செய்யும் யுக்தி என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் போதும்.

அதைவிட்டு தளத்தை விமர்சிப்பது தேவையற்றது.

படைப்பாளிகள் வளர வேண்டுமென்றால் ,
உங்களுக்கு தெரிஞ்ச நட்பு வட்டத்தில் நீங்க போயி படைப்பாளியின் படைப்பை திருந்த்துங்க. அதே போல எல்லா நட்பு குழுவிலும் இருப்பவர்கள் அவரவர் நண்பர்கள் நல்ல படைப்பாளியாக வர வேண்டுமென்றால் அறிவுரை வழங்கட்டும். பரிசுதான் வேண்டுமென்றால் இப்படிப்பட்ட முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அத விட்டுட்டு பொத்தாம் பொதுவா எல்லாமே மோசம்ன்னு சொல்றது நியாயம் இல்லை.



நன்றி வணக்கம்

-சோழன்


அருமையென்றவருக்கு அருமையான நன்றி

நன்றி. வருகைக்கு வணக்கம்

இளவரசு அல்ல.. இளவல். வரவேற்ற மலருக்கு நன்றி

புதுக்கவி வந்துட்டேன். புதுமையாய் தருகிறேன். நன்றி

வரவேற்பில் மகிழ்ச்சி.

வந்துட்டேன்.. வணக்கம்

கண்ணன் மீதான காதல் அருமை

நெல்சன் மண்டேலா. அந்த சன் போன்றவர். கவிதை அற்புதம் .

இவர் யார் என்று தெரிகிறதா ? தீ என்று தெரிகிறதா ?
விஷவரூபம் பாடல் கேட்டது போல ஐயா கவிதை அற்புதம் .

காதல் ரசனை ஜில் ஜில்


Cholan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே