பிடிக்கவில்லை

எல்லா மனிதரை
போல எனக்கும்
வெள்ளை அணுகளும் சிவப்பணுகளும்
மட்டுமே உள்ளது....
பின்பு நீ மட்டும்
எங்கிருத்து
கண்டுகொண்டாய்
என் உடலில்
கருப்பணுக்களை....
கருப்பாக பிறந்தது
என் குற்றமா....?
கடவுள் நேரில் வந்தால்
அவன் சட்டையை
பிடித்து கேட்ப்பேன்
ஏன் என்னை மட்டும்
அவளுக்கு பிடித்தபடி
படைக்கவில்லை என்று...?
இந்த உலகம் பிடிக்கவில்லை...
வாழ பிடிக்கவில்லை...
அவளுக்கு பிடிக்காத
என் முகம் நிறம் பிடிக்கவில்லை....
அவளுக்கு பிடிக்காத
கவிதையை எழுதும்
என் பேனா பிடிக்கவில்லை... உன்னையே நினைத்து
கிழியும் என் இதயம் பிடிக்கவில்லை...
மொத்ததில் என்னையே
எனக்கு பிடிக்கவில்லை....

எழுதியவர் : கோபி‬ (24-Dec-13, 8:27 pm)
Tanglish : pidikkavillai
பார்வை : 279

மேலே