சுனாமி நினைவலைகள்
ஏ சுனாமியே
உனக்கே இது நியாயமா !
ஒரு நொடியில் ஓராயிரம்
உயிர்களை கொன்றாயே!
உன் அலைகளின் ஆர்ப்பரிப்பால்
எங்களை அள்ளிச் சென்றாயே!
பிஞ்சு மனதில் எவ்வளவு ஆசைகள் ஒளிந்திருக்கும்
அந்த ஆசைகளை நீ
அலையாய் வந்து அள்ளிச் சென்றாயே
உன் கோபத்தை அடக்க நீ
எங்களை அடக்கமாக்கினாயே
இப்போது உனக்கு மகிழ்ச்சியா ?
எட்டாண்டுகள் என்ன எட்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவலை எங்களை விட்டு நீங்காது ......