சிநேகிதியே

சில நாட்களாய்
அறிமுகம்
சிரிப்பு பூவாய்
சிநேகம்
சில்லென்ற குளிரின்
பரவசம்
சிறுதுளி மழையின்
உற்சாகம்

முகம் கண்டு
அறிமுகமில்லை
பக்கம் அமர்ந்து
பேசியதில்லை
துக்கம் வந்தபோது
அன்னைமடி
ஆறுதலாய் உந்தன்
அலைபேசி கதிர்வீச்சு
எந்தன் தலையை வருடியதே..!
உந்தன் மாண்பு உயர்வென்று....
அந்த அன்பு சொல்கிறதே..

நட்பே...!
உன்னிடமிருந்து ஏதோ
ஒன்று என்னிடமிருந்து
கடத்தி சென்றுவிட்டது
எது அது ?
எதுவோ அது
அதுவாகவே இருக்கட்டும்
இதுவே முப்பொழுதும்
நிலைக்கட்டும்.

நட்பின் எல்லை
எதுவோ அதுவரை
அன்பின் உச்சம்
எதுவோ அதுவரை

இந்த வரையறையில்
நம் நட்பு நீடிக்கட்டும்.
உன்னுடன் மட்டுமே
என்னுடன் நிம்மதி
நீடிக்குமென்ற மூடப்பழக்கம்
என்னோடு நீடிக்கிறது.

இந்த மூடப்பழக்கத்தை
பெரியாரும் ஆதரிப்பார்.
அறிந்தவரும் ஆசிர்வதிப்பார்


நீடிக்கட்டுமே !

நீயும் நானும்
உள்ளவரை
எனுறென்றும்
நட்பு ஒன்றே
நீடிக்கட்டுமே ..!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (27-Dec-13, 2:13 am)
பார்வை : 590

மேலே