புத்தாண்டு வாழ்த்துக்கள்
வளங்கள் பெருகவேண்டும் -நாட்டில்
வன்மம் ஒழியவேண்டும் -மண்
வாசனை எங்கும் மணக்க வேண்டும் -அந்த
வானம் போல் மக்களின் மனது இருக்க வேண்டும் .
ஒற்றுமை எங்கும் ஒங்க வேண்டும்
ஓர் குலமாய் எல்லோரும் வாழ வேண்டும்
ஓதும் கல்வி கூடத்தில் தமிழ் மொழி வேண்டும்
ஒன்றே ஓன்று அதுவே நன்று என்று சொல்லும்
ஒற்றுமை மனிதர் மனதில் திகழ வேண்டும்
கற்ற கல்விக்கு கணக்காய் வாழ
கற்றவர் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்
காற்றையும் காசாக்கும் அழகு வித்தை
கற்றவரிடம் இருந்து விலகி வாழ வேண்டும்
மண்ணில் மனிதர் அன்பை விதைத்து
மனித நேயத்தை அறுவடை செய்ய வேண்டும்
மணக்கும் இனிய புத்தாண்டே அதற்கு நீ தான்
மனது வைத்து அருள் புரிய வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எழுத்து வலை தள ஆசிரியருக்கும்
படைப்பாளர்களுக்கும், கவிஞர் பெருமக்களுக்கும்
வாசக அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள் :)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@