உன்னை நினைக்கிறேன்

பேசத் தெரியாத
மனம் உன்னிடம் பேச
நினைக்கிறது...
பார்க்க தெரியாத
கண்கள் உன்னை காண
நினைக்கிறது...
பறக்க தெரியாத
பறவை உன்னை தூக்கி
செல்ல நினைக்கிறது...
தொடர்ந்து வரும்
நிழல் உன் பின்னால்
வர நினைக்கிறது...
விரைந்து செல்லும்
காற்று உன்னை அழைத்து
செல்ல நினைக்கிறது...
மறைந்து செல்லும்
நிலவு உன்னை சுமந்து
செல்ல நினைக்கிறது...
விரைந்து செல்லும்
மேகம் உன்னை போர்த்தி
கொள்ள நினைக்கிறது...
படர்ந்து செல்லும்
கொடிகள் உன்னை தாங்கி
கொள்ள நினைக்கிறது...
கடந்து செல்லும்
நதிகள் உன்னை கவர்ந்து
செல்ல நினைக்கிறது...
எத்தனை
நினைவுகள் அன்பே
உன் வருகை
கண்டு இதற்கு
பெயர் தான் காதலா...