இன்னும் காத்திருக்கிறேன்

உனக்காய்
நான் காத்திருக்கிறேன்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
நில்லாமல் செல்லும் பேருந்தை போல்
என் மனமும் நில்லாமல்
உன்னை எண்ணிக்கொண்டு

அசை போட்டு பார்க்கிறேன்
அந்த ஆரம்பகாலத்தை....

நூலகவாயிலில் உன்னை கண்டேன்
அன்று முதல் படிக்க தொடங்கினேன்
நூல்களை அல்ல
உன்னை பெண்ணே

செய்முறை கூடத்தில்
எதையோ கண்டுபிடித்தாய்
கூறி சென்றாய்
நானும் கண்டுப்பிடித்தேன்
உன் மீதான என் காதலை

உன் நட்பை பெற
யாரை தூது அனுப்ப என
எண்ணிய வேளையில்
எனக்காய் கிடைத்தது
நீ விட்டு சென்ற
கைகுட்டையும்
உன் வாசனையும்

கைக்குட்டையை திருப்பி கொடுத்து
இன்னும் நிரப்பி வைத்து இருக்கிறேன்
உன் வாசனையை என் நாசியில்

நம் சந்திப்புக்கள் தொடர்ந்தன
பேச்சுக்கள் வளர்ந்தன
நட்பாய் நீ பேசினாலும்
காதலாகி உருகி நின்றேன் - நான்

காதலை காட்சி படுத்த நினைத்து
உன்னை சந்தித்த வேளைகளில்
மௌனமே என் மொழியாகி போனது
அர்த்தம் இல்லாத வார்த்தைகளை
உன்னுடன் பேசி கொண்டு
அர்த்தமான என் காதலை
பேசாமலே போகிறேன்!

எப்படியோ
சொல்லிவிட்டேன் உன்மிதான
என் காதலை!
தயக்கங்களும் சில வேளை
மௌனங்களும் உன் பதிலாகி போக
பதறித்தான் போனேன்
மனம் சிதறித்தான் போனேன்

பின்னொரு நாளில்
வெட்கத்துடன்
ஒப்ப்கொண்டாய் என் காதலை
வென்றேன்
உலகை வென்றேன்!

எனக்காக நீயும்
உனக்காக நானும்
பேச தொடங்கினோம்
உன் விழிமொழியையும்
என் உடல் மொழியையும்
நாம் புரிந்துகொண்டோம்

தோட்டத்து பூக்களை ரசிப்பவனை
குத்தும் முள்ளாய்
வந்தது உன் பிரிவு
உன் தந்தைக்கு பணிமாற்றம்
என்றாய்!!!
உயிர் விட்டு உடல் செல்வதாய்
நீ சொல்ல
உடல் விட்டு உயிர்
உன்னோடு வருவதாய்
நான் சொல்லி பிரிய தொடங்கினோம்

என் விட்டு காலண்டரும்
சில மாறி தான் போனது
என்னுள் சில மாற்றங்கள்
வந்துதான் சேர்ந்தது
மாறாமல் உன் நினைவு
மட்டும் நின்று தான் போனது

இப்போதும்
உனக்காக காத்திருக்கும்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
இன்னும் காத்து கொண்டு இருக்கிறேன்
நீ வருவாய் என

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது) (31-Dec-13, 6:23 pm)
Tanglish : innum kaathirukiren
பார்வை : 171

சிறந்த கவிதைகள்

மேலே