பத்தோடு பதினொன்றா இது
சோகமாய் விடைபெற்றது 2013
சுகமாய் பிறந்தது 2014........
ஆண்டொன்று மறைவதும்
ஆண்டொன்று பிறப்பதும்
அதிசயம் ஒன்றுமில்லை
இது இயற்கையின் எதார்த்தம் ...........
உன் லட்சியத்தின் பயணத்தில்
நேற்று எங்கிருந்தாய்
இன்று எங்கிருக்கிறாய்
நாளை எப்படி இருப்பாய்
என்பதுதான் கேள்வி ?
வருடங்களோடு உன் வயதும்
கடந்தும் பிறந்தும் மறைந்தும் போகிறது
என்பதை உன்னால் மறுக்க முடியுமா ..........
எவெரெவர் உன்னால் இன்புற்றவர்
எவெரெவர் உன்னால் துன்புற்றவர்
எவர் எவர்க்கு வாழ்வலித்தாய்
எவர் எவர்க்கு வாயப்பளித்தாய்
நீ செய்த சாதனைதான் என்ன .........
நேரங்களோடு உங்கள்
பொன்னான நேரமும்
வீணாகிக்கொண்டிருக்கிறது ,
காசுபோனால் திரும்பும் காலம் திரும்பாது ........
கடமைக்காக காலம் தள்ளாமல்
சாதனைக்காக சாக துணி
ஒருநாள் மட்டும் சிறந்தது இல்லை
ஒவ்வொன்றையும் சமமாய் பார் .......
இயற்கையின் படைப்பில்
எல்லா நாட்களுமே வாய்ப்புகளோடு காத்திருக்கு
எல்லா நாட்களிலும் இன்பங்கள் குவிந்திருக்கு .....
பத்தோடு பதினொன்றாய் இல்லாமல்
நேற்றைக்கும் இன்றைக்கும் வித்தியாம் தேடு
நாளைய வாழ்க்கைக்கு அடித்தளம் போடு
நலமுடன் வாழு வளமுடன் வாழு ......