இனிதாகும் வாழ்க்கை
இனிவரும் விடியல் ஒவ்வொன்றும்
உனக்காக இருக்கட்டும்!!
இலையுதிர் காலம்
என்றைக்கும் நிரந்தரம் அல்ல...
நிகழ்ந்தவைகள் எல்லாம் கற்பனைகளும் அல்ல...
விழுவது வீழ்ச்சியும் அல்ல...
இவை அனைத்தும் எழுவதன் முயற்சி..!
தொய்விலா மனமிருந்தால் தொலைதுரம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்..!
தன்னம்பிக்கையை மட்டும்
மூச்சாக் கொண்டு உழைத்திடு...
முட்களில் கூட முத்திரை பதிக்கலாம்..!
முடியாது எனும் முகத்திரையை கிழித்து!!
வாழ்க்கை தேரை வடம் பிடி...
நம்பிக்கை கொண்டு நகர்த்து...
இனிதாகும் வாழ்க்கை...!!!!!