அவள் ஒரு கதாநாயகி

ஆடல் கலையில் ஆனந்த பூச்சரம்

விழிகள் வில்லென வளைத்து

முகமெங்கும் வசீகரம் ததும்ப

பாவனைகளில் பாதி உயிர்
எடுக்கத் தெரிந்தவள்

அழகுகள் குத்திட்டு நெட்டிச் சுளுக்க
வெட்கம் குலுங்கும் அசைவுகளில்

இமைக்க விடாமல்
ரசிக்கவைத்து.....

இளமை அமுதம்
கேணி இறைப்பவள்......

சுழன்று சுழன்று அவள் ஆட ஆட
ஆட்டம் கண்ட சாம்ராஜ்யங்கள்

எத்தனை எத்தனையோ ....

தேவதை பிரியங்கள் கொஞ்சி
தேவ இறவைனை மணந்து

கோயிலில் குடி கொண்டு

அரசாளும் அரசனை தன்னுள்ஆண்டு
அரசி குலத்திற்க்கும் கற்றுத் தந்து

தன் ஒழுக்கம் தாண்டவமாடிய
பூலோக புனித ரம்பை......

என்றும் கல்கி சாண்டில்ய எழுத்துகளில்

வரலாறாய் வாசிக்க வாசிக்க

மாருதி ....அரஸ்..ஓவியங்களில்
இனிமையாய் விழிகள் ரசிக்க ரசிக்க

கூச்சப் பிரியங்கள் கிளப்பி

தினம் தினம் அழகு பிறக்கும்

தெவிட்டா தித்திப்பு மயக்கும்

மதுரச கன்னிகை..அவள் ....என்றும்

தன்னிநிலை மறந்து ஆடி
தனை இரையாளும் மனிதனில்

தன் இறை தேடும்.......தவலோக கதாநாயகி

எழுதியவர் : m.palani samy (5-Jan-14, 8:05 am)
பார்வை : 107

மேலே