கல்நெஞ்சக்காதல்

கல்லெறிந்தாள் என் கண்விழியில்
கல்நெஞ்சக்காரியவள்!!
ஆம்! காதலைக் கொடுத்தாள்!
கவிபாடி ...
என் நெஞ்சையும் கெடுத்தாள் !
பஞ்சுபோல் பறந்துத் திரிந்தேன்!
பாவியவள் .......
தன் பஞ்சணையில்
என்னை அடைத்துவிட்டாள்!
சித்திரமாய் அவளை வரைந்து ,
பத்திரமாய் பதுக்கி வைத்திருந்தேன் !
என் நெஞ்சில்.... !
அவள் என்னை ஏமாற்றியதால் ,
என் பிஞ்சு மனம்
நஞ்சாய்ப் போனது!
இப்போது நானிங்கே .....
போதை பாதையில்
பயணிக்கின்றேன்!
பதை தெரியா பயணிபோல் ....!!!

எழுதியவர் : Antonysam (6-Jan-14, 4:04 pm)
பார்வை : 74

மேலே