மாறும் கிராமங்கள் - சி எம் ஜேசு
வழியோர பாதைகள் பாய்விரித்த
புது பாதைகளாகின்றன
வரப்புகளும் நகர் வண்டி செல்லும்
வழி பாதைகளாயின
கிணற்று மேடுகள் குளத்து மேடுகள்
காணாத கனவுகளாயின
விவசாய நிலங்கள் மங்கி
வாழ்விடங்கள் பொங்கி விட்டன
நாற்புற சாலைகள் நகர்ப்புற சாலைகளாய்
பயணிக்க நன்மை செய்கின்றன
சாதி மதங்கள் மறைந்த சமுதாயம்
எழுந்த நிலை காண முடிகிறது
மாறும் கிராமங்கள் - ஆனால்
இன்னமும் மாறாத நகர்ப் புரங்கள்