காதலென்னும் சோலையினில்34

தொலைப்பேசியை எடுத்து ராஜாவிற்கு அழைப்புக்கொடுத்தாள் ராஜலெக்ஷ்மி.

அப்பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்கவே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அம்மா.


சிறிது நேரம் ராஜலெக்ஷ்மியும், கவிதாவும் மௌனமாக இருந்தார்கள்(கவிதா மனதிற்குள் என்ன நடக்க போகுதோ? என்று நினைத்துக்கொண்டு)எல்லாம் அவன் செயல் என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்...........


ராஜலெக்ஷ்மி கவிதாவிடம் அண்ணி உங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய உண்டு அண்ணன் வரட்டும் எல்லாரும் சேர்ந்து முடிவு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டு ஹாலுக்குள் சென்றாள்...........


ராஜா என்னமோ ஏதோ என்று கொஞ்சம் பதட்டத்துடனும் ஆவேசத்துடனும் கிளம்பத்தயாரானான்.


(ஹாலில் உட்கார்ந்துகொண்டு ராஜலெக்ஷ்மி தாராவை நினைத்து வெட்கமும், வேதனையும் அடைந்தாள், அவள் கூட சேர்ந்து நாமும் சில நேரங்களில் அண்ணியை தவறுதலாக பேசியிருக்கோமே; நமக்கு ஏன் புத்தி இப்படி போச்சி என்று மனதிற்குள் நினைத்து வருத்தப்பட்டாள், ஏதோ நம்மளால் ஆன உதவி அண்ணனையும், அண்ணியையும் சேர்த்து வைக்கலாம் என்ற முடிவுடன் கண்ணீரைத்துடைத்துக்கொண்டாள்...........)


அப்பொழுது calling bell அடிக்கவே அண்ணன் தான் என்று கதவை திறந்தாள் அங்கு தாரா வந்து நிற்கவே வேகமாக உள்ளே சென்று விட்டாள்...........


இவள் எதுக்கு இங்கே என்று நினைத்துக்கொண்டு தன் தாயிடம் போய் "தாரா வந்திருக்கிறாள்" என்றுசொன்னாள்.


ராஜலெக்ஷ்மியின் அம்மாவுக்கு ராஜலெக்ஷ்மி தாரா வீட்டுக்கு சென்றதோ! அங்கு நடந்ததோ! எதுவும் தெரியாது!!!!!!!!


வெளியே வந்து தாராவிடம் பேசினாள்; வழக்கம் போல் கவிதாவை கிண்டல் பண்ணுவதை விட்டு விட்டு அன்பாக பேசினாள்..........


அம்மாவுக்கோ ஆச்சரியமாக இருந்தது எப்பவும் ஏதோ வம்புடன் வருபவள் இன்று இவ்வளவு சாதுவாக இருக்கிறாளே என்று நினைத்தவள் சாப்பிடுறியா என்று கேட்டு விட்டு டிபன் எடுத்து வைத்தாள்.......


இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ராஜலெக்ஷ்மி கவிதாவிடம் போய் "அண்ணி தோட்டத்துக்கு போவோமா, குட்டி பையன் எங்கே" என்று கேட்டு விட்டு அவனையும் தூக்கி கொண்டு இருவரும் தோட்டத்திற்கு சென்றனர்.....


போகும் போது கவிதாவும், தாராவும் ஒருவரை ஒருவர் பார்த்த பிறகும் பேசிக்கொள்ளவில்லை! அங்க என்ன அண்ணி பார்வை வாங்க என்று குத்தலாக பேசிவிட்டு சென்றாள் ராஜலெக்ஷ்மி......


உடனே அம்மா இவளுக்கு இன்னிக்கு என்ன ஆச்சி "தாரா அக்கா தாரா அக்கா" ன்னு உன்ன விடவே மாட்டா இப்போ கண்டும் காணாமல் போகிறாள் என்றாள்........


விடுங்க அத்தை புது சொந்தங்கள் வந்தால் பழைய சொந்தங்கள் எல்லாம் விட்டு போகும் என்று சொல்லிவிட்டு.
சரி அத்தை கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் வரும் போது...................
கவிதாவும், ராஜலெக்ஷ்மியும், குட்டி ராஜாவும் தோட்டத்தில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்து வெளியில் நின்ற ஒருவனிடம் கண்ணால் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் தாரா................





தொடரும்.

எழுதியவர் : (7-Jan-14, 1:11 pm)
பார்வை : 272

மேலே