-----------------முதிர் கன்னியாகிய நான்------------------
பிறக்கும் போது தெரியவில்லை,
விலை கொடுத்து விலை போகவேண்டும் என்று.
வீடு,வாகனம்,நகை எல்லாம் வேண்டுமாம்.
என் உள்ளம் மட்டும் தெரியவில்லை அவர்களுக்கு.
வருபவர் எல்லாம் எவ்வளவு தேறும் என்று - எண்ணுகிறார்கள் தவிர,
என் எண்ணத்தை மதிக்கவில்லை.
வயது கடந்து,.. கேட்கும் விலை தர முடியாமல்
கண்ணிரை சிந்தி முகம் கழவுகிறோம்.
இளையவளுக்கு வழி தர முடியாமல்
நானும் வாழ முடியாமல்
பெற்றோர்க்கு சுமையாக,
வாசலில் காத்து இருககிறேன்.
எனக்கு...இல்லை இல்லை...
என்னை போன்றவார்களுக்கு,
விடியலும்...நல் வாழ்வும்
அமையும் என்று.