37 சிலநிமிடங்களே வாழ்ந்தாலும்
சொந்தக் கவிதை -37
சின்னக் குழந்தையொன்று நூல்தனில்
எனைக்கட்டி வானிலே பறக்கவிட்டான்
மெல்லமெல்ல உயரே செல்கின்றேன்
தென்றலில் இதமாய் பறக்கின்றேன்
கற்பனையில் சுகமாய் மிதக்கின்றேன்
குழந்தையின் ஆனந்தம் பேரின்பம்
கண்டு எல்லையில்லா இன்பம்கொண்டேன்
பூரித்திருந்த வேளையிலே வந்ததோ
பேய்க்காற்று சிறுவனும் சட்டெனநூலை
இழுத்திடவே நூலும் அறுந்துப்போனதுவே .
ஜிவ்வென்று உயரே போகின்றேன்
திசை மாறிப் பறக்கின்றேன்
ஆதருவு யாருமில்லை தலைவிதி
என்னவென்று யாரறிவார் என்இறைவா
ஆனாலும் சிலநிமிடங்களே வாழ்ந்தாலும்
பிறர்க்கு இன்பம் அளித்தவாழ்க்கை
மீண்டும் கொடு என்இறைவா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
