தமிழுடையான்

குணமுடையான், கனமுடையான்,
பரியேறும் தொழிலுடையான்;
வில்லிற்கும், வாளிற்கும்
வாரிசென்னும் பேருடையான்;
வேலேறியும் வித்தைதனில்
படையொடுக்கும் கோச்சடையான்;
தோள்தட்டி வந்தோர்தம்
தொடைநடுக்கும் உரமுடையான்;
மார்நின்ற அம்பெடுத்து
குடல்கிழிக்கும் திணவுடையான்;
மதம்சிந்து கரிமருளும்
சிம்மமெனும் சிறப்புடையான்;
மண்டியிட்ட மாந்தர்க்குயிர்,
அளிக்கும பயமுடையான்;
தரங்களுக்கு திலகம்போல்,
தாய்மொழி தமிழுடையான்.

எழுதியவர் : அ ஜோயல் சாம்ராஜ் (9-Jan-14, 7:55 pm)
பார்வை : 280

மேலே