தாழலயே
கண்டாங்கி சேல கட்டி ,
உன்னோடு கை கோர்த்து ,
நான் சுத்தி வந்தப் பாதையெல்லாம் ,
சும்மா கிடக்குதடா ;
பட்டு சேல கட்டினாலும் ,
தனியே போகயில ,
இந்த பாவி மனசு தவிக்குதடா ;
பக்கத்துல நானிருந்து ,
பக்குவமா பரிமாற ,
மீண்டும் நெஞ்சு ஏங்குதடா;
விருந்தா இருந்தாலும் ,
மருந்தா தெரியுதடா,
நான் மட்டும் உண்ணும் போது ;
சுகமேதும் இல்லையடா ;
நாமெதிர்கொண்ட கஷ்டங்களைப்போல் !
சொல்லி மனம் தாழலயே !
கனவா ! காதலா !உன் பிரிவதனை !