கலாச்சாரம்

வருடமொருமுறை இனிதாகக்கொண்டாடும்
இனிய தைப்பொங்கலே. நீ வரும் போது என்
இதயம் தீயாய் எரிகின்றதே! வலிபட்ட இதயத்தின்
வருத்தங்கள் உன்மீதல்ல. வார்த்தைகளில் அடங்காத
கிராமிய பொங்கலின் அழகிய ஞாபகங்கள் மீது தான்.

புலம் பேர்ந்து உறங்காமல் துடிக்கும் என் இதயத்தை
தொட்டு எழுப்பியுள்ள தை மகளே.. சோகம் கொண்ட
என் கண்ணுக்குள் பூத்திருக்கும் உன் ஞாபகங்களை.
எப்படி மறக்க முடியும் ? என்னென்று மறைக்க முடியும்?
வானமும் பூமியும் இறைவணின் சொத்து.தையும்
பொங்கலும் தமிழனின் புராதன வரலாற்றுச் சொத்து.
கலைந்த நினைவுகளும் கலையாத நினைவுகளுமாய்
தொடரும் ஞாபகங்களும்.தொடராத கனவுகளுமாய்

புலம் பேர் வாழ்வில் தை முதல் நாளில்.
நிஜமில்லா தைபொங்கலிற்கு நிஜம் தேடும் சோகம்.
முடிந்த அவலங்ககளும் முடியாத துயரங்களும்.
ஊர் நினைவு தாங்கிய புத்துணர்வு தைப்பொங்கல்.
வீட்டு முற்றத்தில் சொந்தமில்லாத நிலம். சீமேந்தால்
அமைந்த தரை.அதை கழுவி. கோலம் இட்டு .அடுப்பில்
பானையை வைத்து நெருப்பூட்ட.அனுமதியற்ற விதிமீறல்
ஆபத்து. சட்டதிட்டங்கள். கதிரவனை வணங்கி வீட்டின்
பின்புறத்தில்.பொங்கலோ பொங்கல்
பறிபோன என் கலாச்சாரம் என்று எனை வந்துசெருமோ

எழுதியவர் : (11-Jan-14, 2:43 am)
Tanglish : kalacharam
பார்வை : 70

மேலே