காதலுக்கே காதல் வந்தால்

காதலுக்குத் தேவையா
ஏ பி சி டி
காதலுக்கும் வேண்டுமோ
ய ர ல வ ழ ள
கானொலியில்
கண்கள் நான்கும்
கதைகள் பேச
காதொலி வேண்டுமா
கண்கள் மட்டுமே
காதலை கொண்டு சேர்க்கும்
சில நேரம்
கொன்றும் பார்க்கும்
கண்கள் மட்டுமே
இமை அடித்து
என்றும் எங்கும்
காதல் உண்டென்று சொல்லும்
காதலிக்க கண்கள் உண்டு
காதல் தான் இல்லை எனில்
கவிதையைக் காதலி.
நீ எழுதின் அது உன் காதலி.
யார் எழுதினும்
கவிதைதானே காதலின் காதலி.
யார் கண்டது
கவிதையும் பெண்தானோ ! ! !