தமிழா தமிழா
தயங்கித் தயங்கி புழுங்கிக் கிடக்கும் தமிழா!
தளர்த்து மனத்தை, உயர்த்து இனத்தை, இனியா,…
தாழ்த்தி தயக்கி தாக்கி தூற்றி என் கண்டாய்
விழித்து வீழ்த்தி உழைத்து வியர்த்து
வெளி வருவாய்!
பொங்கிடும் தைப்பொங்கலில்(லாய்)
ஓங்கிடும் நல் ஒற்றுமை நீ பெறுவாய்!
அண்டினோற்கு அடைக்கலம் தந்து அண்டிப்பிழைக்கின்றோம்!
தண்டினோர்கையில் தந்துவிட்டு
நொந்து உழைக்கின்றோம்!
தீண்டினது பாம்பானப்போதும்
திரும்பி சிரிக்கின்றோம்!
தீண்டாமை சுவரைப் போட்டு
தீஞ்சு கிடக்கின்றோம்!
தீதும் நன்றும் புரிதல் வேண்டும் ஒன்றுபடு;
அன்னைத் தமிழை அலங்கரிக்க
கவியம்பினை தொடு!
அண்டத்தமிழரை ஒன்றுசேர்க்க
மெய்யன்பினால் தொடு!
வெள்ளை வேட்டி உலகை ஆளனும்
அறிவு வாளெடு!
வெல்வோம் என்று விஞ்ஞானம் கொண்டு அனுதினம் போரிடு! – தமிழன்,
வந்தால்-வெற்றி செய்தால்-சிறப்பு
என்றே வித்திடு!
தந்தான், தருவான், தருவதும் தமிழன் என்றாக்கிடு!
தரணியாவும் தமிழனாக்கிடு
தமிழை பரப்பிடு! - கடலை
துறுத்து, மீண்டும் குமரிக்கண்டம் படைத்திடலாம்
பன்னிருகோடி தமிழருங்கூடி பொது நகரம் பன்னிடலாம்
தமிழா ஒன்றுபடு