நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி

( இயற்க்கை வேளாண் விஞ்ஞானிக்கு
ஒரு இறுதி வணக்கம் )

சிரம்
வைத்தவனெல்லாம்
மனிதனில்லை
மேலே
சிரம்
வைத்தவனெல்லாம்
மனிதனில்லை

மரம்
வைத்தவனே
மனிதன்
கீழே
மரம்
வைத்தவனே
மனிதனென்று...
படைப்புக்கே
புதிய
பரிமாணம்
தந்தவனே...

உரம்
பூச்சிக்கொல்லி
மரபணு
மாற்றிய
விதைகளென்று
மகசூலுக்கென்று
வந்தவையெல்லாம்
மலடாக்கிப் போனது
மண்ணை
தாய் மண்ணை....
இயற்கை உரத்தால்
பஞ்ச கவ்யத்தால்
மண்புழு எருவால்
தன் மகளே
"சூல்" கொண்டதைப்போல்.....
வளமாக்கி தந்தாயே
கிழவா ...
இறைவனும்
உனக்கு
நிகரா.....??!

சுவாமி விவேகானந்தன்
மீசை பாரதி
மூன்றாவதாய் நீ....
தலை
இருந்தும்
முண்டங்களாய்
ஆயிரமாயிரம்
மனிதர்கள்
இங்கே திரிய ...
அணிந்த
முண்டாசுக்கு கூட
ஆம் .....
தலைக்கு
அணிந்த
முண்டாசுக்கு கூட ...
முதல் மரியாதை
உங்கள்
மூவராலே
வந்தது....
அற்புதம்.

புனிதனே
பூமியெங்கும்
தூவப்படும்
உன் அஸ்தியால்
செயற்கை எல்லாம்
செல்லரித்து போகட்டும்
இயற்க்கை
ஒன்றே
இயல்பென்றாகட்டும்

இயற்க்கை
தன்
இரு கைகளால்
இனி உன்னை
வணங்கும்
நம்மாழ்வாரே...
இதோ
எம்முள்
உம்மை
விதைத்து விட்டோம்
முளைத்து எழட்டும்
முண்டாசு கட்டாத
ஆயிரம் ஆயிரம்
நமமால்வார்கள் ....
முடி சூடி
கொள்ளட்டும்
இயற்கையும்
இனியாவது... !!

எழுதியவர் : murugaanandan (13-Jan-14, 9:08 am)
பார்வை : 79

மேலே