பொங்கல்,,

எனக்கு நல்ல நாள்
கெட்ட நாள் என்று
எந்த நாளும் கிடையாது...
வயதுக்கு சோறு கிடைத்த நாள்
பொங்கல் என்றால்
சோறு கிடைக்காத நாள்
அந்த தொங்கல்
இதுதான் என் வாழ்க்கை...
எனக்கு பேராசை எல்லாம்
ஒன்றும் கிடையாது
ஒரே ஒரு நப்பாசை தான்
எல்லோரும் மனிதனாக
வேண்டுமென்று...
பொங்கல் சிலருக்கு
மகிழ்ச்சியை விட்டு
தருகின்றது என்றால்
எனக்கு ஒவ்வொரு நாளும்
கற்று தருகின்றது
வாழ்க்கையின் அனுபவத்தை...
அடுத்த நிமிடம் பிறப்பது கூட
புதுமையாய் உள்ளது எனக்கு...
யாருக்கு தெரியும்
இதுதான் என் கடைசி
பொங்கலாக கூட இருக்கலாம்...
நானும் வாழ வேண்டுமென்று
நினைக்கும் என்
உயிர் நண்பர்களை
வாழ்த்த வயதில்லை என்றாலும்
மனமார வாழ்த்துகின்றேன்...

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 12:00 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 95

மேலே