அம்மா
ஒரு விரலாய்...மறு குரலாய் இருப்பாயடா
உறக்கத்தில் சிரிப்பு. கனவில் கதறல் தாயின்
இறுக்கத்தில் அமைதி என நீ ஒரு நவரச விளக்கம்!
தஞ்சை மண்ணிலத்தாள் உன் பாட்டி சுவை
கொஞ்சும் அறுசுவை உணவளிப்பாள்
உனக்கு.
புதுச்சேரி மண்ணிலத்தான் உன் பாட்டன் குடமாய்
மதுவை மயக்கும் தமிழ்ப்
போதை தருவான் உனக்கு.
காவல்துறை கண்ணியம் கற்பித்தல் தொழிலின் கனிவு
தாவலாய் உன்னிடம் தஞ்சம். முப்பாட்டன் சொத்து இவை பெறு
காயத்தைத் திரியாக்கியவள் உன்தாய்
நியாயத்தில் விவேக வீரம் பெற்றவன் உன் தந்தை
பனிநீர் மென்மை பவளப்பூ மணம்
தனி மலர் சுவை தங்கத்தின் நிறம்