சட்டிக்குள்ளே நீ
சட்டிக்குள்ளே சாம்பலாகப்
போகின்ற மனிதனடா
பெண்ணுடம்பை காசுகொண்டு
காணுகின்ற விந்தையடா
புதிய உயிர் இங்குவர
அவள் போடுகின்ற பிட்சையடா
மெய் மறந்து நீ செய்யும்
காரியம் மிக அவலமடா
உன்னுடம்பை இருகையில்
எந்தும்முன்பு நீ மாறு
மகளிர் வாழ்வு தம்மில்
நல்ல மாறுதலை உண்டாக்கு
-இப்படிக்கு முதல்பக்கம்