துணிவே துணை
அடக்கினால் பரிசுண்டு - பயந்தே
அலறினால் வலியுண்டு....!
துணிந்தவ்ருக்கே சொந்தமெனத்
துலங்கும் இந்தப் பூமி........!
தோற்பவர்க்கும் வழிகாட்ட நம்
தூய நினைவே சாமி.........!
எகிறிப் பாயட்டும் காளைக் கவலை
எதிர்த்து அடக்குங்கள் இதுதான் வேளை...!!!
பின்னோக்கி ஓடினால்
பிரச்சனைகள் துரத்தி வரும்......!
முட்டியே தள்ளுங்கள்
முறியட்டும் அதன் கொம்பு.....!