எல்லாம் பொய்

சாலையின் ஓரப்பார்வையில்
சிக்கினான் ஒருவன்

உலகே பொய் என்றான் அவன்
உலகம் அவனை பித்தன் என்றது

நின்று பார்க்க யாருமில்லை - அவனும் இந்த
நில்லாவுலகினை கண்டுகொள்ள வில்லை

எல்லா மனிதரும் அவனுக்கு ஒன்று தான்
எல்லாருக்கும் அவன் ஒன்று தான்

உலகே பொய் என்றான் - மீண்டும்
உணர்ந்து பார்க்க நேரமில்லை

என் பேருந்து வந்து விட்டது
என் பார்வையோ அவன் மீதே

எழுந்து வந்தான் எதிரில்
எமனின் தூதன்

கண் இமைக்கும் நேரம் - அவனை
காலன் கொண்டு சென்றான்

இனி அவனும் பொய்
நாளை நானும் பொய்

உணர நேரம் கிடைத்தது
உணர்ந்ததை அறிவு ஏற்க மறுக்கிறது

எல்லாமே பொய்
இங்கு எல்லாமே பொய்

எழுதியவர் : நிலா மகள் (15-Jan-14, 12:15 pm)
Tanglish : ellam poy
பார்வை : 690

மேலே