பிறிவே பிரிந்துவிடு

அழுது கொண்டே
விழுதாய் மாற - பூவாய்
பிறந்தது,
மலர்ந்தது,
காய்ந்தது.

மலர்ந்த பூ
உலர்ந்தது – தத்தம்
இனப் பெருக்கத்தினால்.

உன் விடியலுக்கு
ஏங்கி,
கை ஏந்தி நின்றேன்
மழையுடனும் வெயிலுடனும்!
நீ வளர – நம்
குலம் உயர.
நீ வானுயர வளர்ந்தபோது
என் வானத்தில்
உனக்கு உரைவிடம்
இல்லையென்று கிள்ளி
எறிந்தாய்.

அப்போதும் வேண்டினோம்,
எங்கள் முட்கள் -நீ
கிள்ளி எறியும்போது,
உன்னை தீண்டாமலிருக்க.

தென்றலால் மனம்
வீசப்பட்ட நாங்கள்,
தெருவில் வீசப்பட்டோம்

உன் வாழ்வில் பெருக்கத்தை காண
எம் பூவிதழில் சுருக்கத்தை கண்டோம்.

பன்னீரில் நீ விளையாட,
கண்ணீருடன்
கையேந்தி நிற்க்கிறோம்
தண்ணீருக்காக – இந்
நிலைமை வாழ்வதற்க்கல்ல.

அழுது கொண்டே
விழுதாய் மாற - பூவாய்
பிறந்தது,
மலர்ந்தது,
காய்ந்தது,
இறந்தது.

மக்களே!
தரிசு நிலத்தில்
பூத்த பூ நாம்!
முள்ளாக தந்தையிருந்தாலும்
கோர இலையாக தாயிருந்தாலும்
இறுதியில் பூவாகிய
நம்மை முளைவிக்க
உறுதி பூண்டனர்.

பெற்றோரின் பிச்சை நாம்,
வாழ்வாதாரத்திற்க்காக
அவர்களை பிச்சையெடுக்க வைப்பத்து
தீங்கு!!
பிறிவே பிரிந்துவிடு – என்
உறவே சேர்ந்துவிடு

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (18-Jan-14, 4:26 am)
பார்வை : 115

மேலே