எழுச்சி கொண்ட தமிழனின் பொங்கல் வாழ்த்து

எழுச்சி கொண்ட தமிழனின் பொங்கல் வாழ்த்து

**எழுச்சி கொண்ட தமிழனின் பொங்கல் வாழ்த்து**

என் வயிற்றுக்காக..
ஏர் பிடித்து தலைகோதி
வியர்வையை வித்தாக்கி
உழைப்பை உரமாக்கிய
உழவனே...
நீதான் தைமகளின் தலை மகன்..

தழைத்த தைமகளுக்கு
துளிர்த்த தமிழனின்
வியர்வை துளிகளின்
வாழ்த்துகள்...

பழமை பேசாத தமிழா..
பழமை மறக்காத தோழா..
இப்பூவுலகில் தன்நிலை உயர
தமிழன்
வீறுகொண்டு எழுந்து வர..
விவேகமாய் நிமிர்ந்து வர..
பொங்குக பொங்கல்....

எழுதியவர் : Vishalachi.S (18-Jan-14, 11:26 am)
பார்வை : 464

மேலே