கலியுகக் காடுகள் -- கண்ணன்

கலியுகக் காடுகள்
இந்த நாகரீக நகரங்கள்.. !!

காட்டின் பறவைகள்
நகர வாசிகள்..!!

அடுக்கு மாடி
கட்டிட மரத்தில்
கூடு வாங்கி வாழ்வார்கள்..!!

தண்ணீர் குழாய்கள்
இரும்பு வேர்கள்..
உரிஞ்ச மட்டுமே தெரிந்த
உயிர் அற்ற அட்டைகள்..!!


இயந்திரச் சிறகுகளில்
வனவலம் செல்வார்கள்..
வாகனக் கூவல்கள்
எச்சரிக்கை சமிக்ஞைகள்..!!

கடை வீதி வெளிகளில்
உணவு தேடுவார்கள் ..

கண்ணில் படும் உணவை எல்லாம்
கொரிக்க முடியாமல் தவிப்பார்கள்
பணம் என்னும் பேய் இல்லா
விக்கிரமாதித்தர்கள்..!!

ஆந்தை விழி கொண்டவரும்
வாழும் காடு இது..!!

நரி குணம் கொண்டவர்
நிறைய இங்கு உண்டு..!!

எல்லைகள் கட்டப்பட்ட
சுட்ட மண் காடு இது ..!!

இந்த கூடு
இன்னார்க்கு சொந்தம் என்ற
எழுத்துப்பலகை வாயில் கொண்டு..!!

எழுதியவர் : வெ கண்ணன் (18-Jan-14, 12:17 pm)
பார்வை : 83

மேலே