பாசப் பொய்கையில்

மடல் விரித்து
மலர்ந்தது மணமலர்
தென்றல் தொட்டு
வான வீதியில்
எடுத்துச் சென்றது
நறு மணத்தினை
கதிரவன் எழுந்து வந்து
கரம் பிடித்தான்
காலை மலரினை !

புன்னகை இதழ் விரித்து
காத்திருக்கிறாள்
ஒரு மணமலர்
கரம் பிடிக்க ஒரு கதிரவன்
என்று வருவானோ
இவள் கைபிடிப்பானோ
என்று தவித்து நிக்குது
பாசப் பொய்கையில்
பெற்ற இரண்டு அன்புள்ளங்கள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-14, 10:13 am)
பார்வை : 148

மேலே