பூதம்

பூதம்.
======================================ருத்ரா


கண்கள் விரித்த‌
கருப்புக்கம்பளம்
"பார்வை"

பூகம்பத்தையும்
பொடி செய்தாள்
"கொலுசு"

கண்ணாடிச்
சிணுங்கல்கள்
"வளையல்கள்"

பழம் இல்லாத‌
ஈடன் தோட்டம்.
"ஆப்பிள் ஐ பேட்"

ஒரு மழை பெய்தாள்
ஊசிகளில்.
"சிரிப்பு"

தவளைக் கத்தல்.
சுநாமித்தேனலை.
"மிஸ்ஸ்டு கால்"

இமைகள் கடன் வாங்கி
பிக்காஸோ பறக்கவிட்டான்
"பட்டாம்பூச்சிகள்".

ஓடி ஓடி வந்தவள்
ஓய்வாக காதலித்தாள்.
"அசோக வனம்"

அவனைக் கூடுகட்டிய
"ஹார்ட் லங்"மெஷின்.
"ஹேண்ட் பேக்"

பேசு பேசு..விழுங்கி விடுவேன்.
பூதம் மிரட்டுகிறது.
"செல்ஃபோன் எண்கள்"

=====================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (20-Jan-14, 10:31 am)
பார்வை : 74

மேலே