தமிழன் கல்லறைக்கும் வந்து போவீர் -- மணியன்

உடுத்திய துணி துவைத்து
அடுத்து ஒர் கந்தல் இன்றி
இரு கையால் உடல் மறைத்து
படுத்திருப்பான் புதரின் உள்ளே. . .

ஒரு வாய் சோறு உண்ண
தெரு தெருயவாய் அலைந்தவன் தான்
கோடி வீட்டு கோபால் மகன்
மாடி வீடு கட்டி விட்டான். . . !

போன முறை தேர்தல் வந்து
ஆனானே மந்திரியாய். . .
இந்த முறை தானும் வந்தால்
நொந்து தான் போவான் அன்றோ. . .

அடுத்தவர் தலையைக் கொய்து
ஆடிடும் வரமா கேட்டோம். .
பிறப்பால் தமிழர் எனில்
பொசுங்கிட பார்த்து வெந்தோம். . .

தாய் தந்தை தாரம் இழந்தோம்
தமக்கைகள் கற்பும் இழந்தோம்
தமிழினம் அழியக் கண்டு
தலை கவிழ்ந்து தரையில் வீழ்ந்தோம். . .

ரேட்டு கொஞ்சம் கொடுத்துமேனும்
சீட்டு ஒண்ணு வாங்கி வாரும்.
ஓட்டு கேட்டு நீரும் வந்தால்
குட்டு ஒண்ணும் வாங்கிப் போரும். . .

அஞ்சாண்டு அடித்ததை நீர்
கொஞ்சூண்டு எமக்கு தந்தீர். .
அஞ்சில் பறவை இனம்
அழிந்திட வாய் மூடி நின்றீர். . .

பாசமாய் தோன் தடவி
வேசம் போட்டு தாங்கள் இனி
பேசம் கலை போதும்
நாசமாக போவீர் நீரும். . . .

வாக்குரிமை மட்டும் இல்லை எனில் எமக்கும்
வாய்க்கரிசி போட்டு இருப்பீர். . . ! !
மாண்டவனும் கேட்பான் எம்மை
ஆண்டவன் உம்மைப் பார்த்து. . . ! ! !

எமக்காய் குரல் கொடுத்தோர்
ஈமக்கிரியை முடித்து விட்டீர். . .
கணக்காய் வாக்கு சேர்க்க
கொஞ்சம் கல்லறையும் வந்து போவீர். . .

எழுதியவர் : மல்லி மணியன் (21-Jan-14, 2:51 am)
பார்வை : 84

மேலே