புரிதல்
புரிதல் - 1
நான் மௌனத்தின் அரசன்.
மொழிகளின் முன்னே திக்குவாய். கிட்டாத வார்த்தைகளின் இரைச்சல்களோடு உன்னிடம் வருகிறேன். சப்தங்கள் போதாதா
புரிந்துகொள்ள?
_
புரிதல் - 2
சொல்ல வேண்டுமென்கிற
தவிப்பில்தான் வருகிறேன்.
ஒவ்வொரு முறையும்
சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது. சிலவற்றைச்
சொல்லாமலே புரிந்துகொள்ள வேண்டுமென்பதை
யாருனக்குச் சொல்லித்தருவது?