தமிழ் இன்றி இயங்காது இரு கை - மணியன்
எண்ணங்கள் விதைப்பது எழுத்து
எழுத்தின் வண்ணங்கள் வார்த்தை
வளர்ந்து ஒளிர்வது வரிகள்
வரிகளின் சங்கமம் கவிதை. . . .
கவிதையின் இருப்பிடம் கவிகள்
கவிகள் மிளிர்வது கருத்தில்
கருத்தின் புரிதல் பெருமை
பெருமையை சேர்ப்பது நட்பு. . .
நட்பின் இலக்கணம் அன்பு
அன்பின் உருவம் தாய்மை
தாய்மையின் மகிழ்வு மழலை
மழலையின் வாய்மொழி அமுது. . .
அமுதின் மறு பெயர் தமிழ்
தமிழில் பிற மொழி செயற்கை
தாய்மொழி தூண்டுதல் இயற்கை
தமிழ் இன்றி இயங்குமோ நம் இரு கை. . . ! !