வண்ணத்துபூச்சி
என் கையில் அமர்ந்த வண்ணத்துபூச்சி
பறந்துபோகிறது -இப்பொழுது
அதன் வண்ணங்கள் மட்டும் கையில் உள்ளது
இதுவும் கொஞ்ச நேரத்தில் அழியலாம் - ஆனால்
அப்பொழுது நான் கண்ட அந்த
அதை எப்பொழுது அடைவேன் இனி
அதன் உடலில் நான் கயிறு கட்டமாட்டேன்
என்று எப்படி சொல்வேன்
அதனுடன் நானும் பறப்பேன்
என்று எப்படி சொல்வேன்
யாருக்கு தெரியும் வண்ணத்துபூச்சியின் மொழி.