கண்ணாடி
என் பிம்பத்தை திருடி
எனக்கே காட்டுகிறான்- திருட்டு பையன்
வலது பக்கத்தை இடதாகவும்
இடப்பக்கத்தை வலமாகவும்
மாற்றி காட்டினால் மட்டும்
அடையாளம் தெரியாமல் போய்விடுமா
நம்மை நமக்கு
கவனம் இருக்கட்டும்
கவனிக்க வேண்டி
கல்லை எறியாதீர்கள் - உடைந்துவிடும்
கண்ணாடியும் நம் பிம்பமும்!