மணல்நீரோ

வாசனையற்ற மலரன்றோ
விரும்பிச்சூடிட விதியில்லை!
_
நீட்டிய கரமதை பற்றிட நீதியில் அதற்கொரு இடமில்லை!
சித்தம் கலங்கியே வாடிய போதும் இரத்தம் உறிஞ்சிடும் வலி கண்டேன்!
_
யுத்தம் நடத்தியே வாழ்ந்திடும் போதும் சத்தங்கள் இன்றி சஞ்சலம் கொண்டேன்!
என்கழுத்துநரம்பின் புடைப்பும் கூட என் வெறுப்பின் உச்சம் காட்டிடுதே!
_
வீதியற்ற வசிப்பிடமாய்
நாதியற்றே கிடக்கின்றேன்!
சுற்றிச்சுழந்திடும் பம்பரமாய்
சூழ்ச்சியில் என்னை வீழ்த்திடுதே!
_
கையை விட்டுப்பறந்த காற்றாடி அதை எட்டிப் பிடித்தல் சாத்தியமோ!சுயம்தனை தொலைத்துத் தேடுகையில்
சுகங்கள் தந்திடும் உலகம் இதோ!
_
எதுயெது நீயெனக் கேட்கையிலே எதென்பின் எதுவாய் போவதுவோ!
வரைமுறையற்ற கோட்பாடோ
வாழ்க்கை நிரந்தரமற்ற மணல்நீரோ!

எழுதியவர் : Akramshaaa (25-Jan-14, 8:01 pm)
பார்வை : 81

மேலே