ஒழுக்கத்தின் உச்சத்தை உணர்ந்தேன்
குழந்தைகள் காப்பகம்,
ஒழுக்கத்தின் உச்சத்தை உணர்ந்தேன்.
இவர்கள்
நிற்கும் போதும்
நடக்கும் போதும்
பேசும் போதும்
பாடும் போதும்
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
ஒழுக்கத்தின் உச்சத்தை உணர்ந்தேன்...
இங்கே
உதிரிப்பூக்கள்
எப்போதும்
மல்லிகைச் சரங்களாய்...
-தினேஷ்