கற்காலத்தை முந்திய முற்கால மனிதராய் நாம்

உடுத்த உடை இல்லா காலத்தில்
உருவெடுக்கா இந்த ஜாதி மதம்,
கால சக்கர சுழற்சியில்,
மாற்றம் பெற்று துணியுடுத்தி,
அதனுடன் மதமும் ஜாதியும் சேர்த்துடுத்திக்கொள்ள....
"கற்கால மனிதனுக்கும் முற்காலம் செல்கின்றோம் விலங்கின் குணம் கொண்டு"
சாதியை சுமந்து கொண்டு சாதிக்க இயலுமோ..!

"சோறுண்ணும் போதும்
உடையுடுத்தும் போதும்
பார்கிறோமா இந்த ஜாதியை"
எவன் உழுத சோறு இது
எவன் நெய்த உடை இதுவென்று...!

பழகவும் பேசவும் மட்டும் ஏன்??????
யாரை சொல்வது பிழை
நம் இதிகாசங்களும் கற்று தந்ததல்லவா இவைகளை....
தாழ்ந்த குலத்தினர் அரசு குலத்தினர் என்று
வேறுபாடு எழுந்தது அப்பொழுதே அல்லவே...
எந்த ஒரு இதிகாசத்திலும்...
அரசு குல மக்கள் குருகுலம் பயிலலாம்...
வேற்று மக்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்...
இவை தானே பழைமையின் விதைகள்
விதை ஒன்று விதைக்க
மரம் ஒன்றா முளைக்கும்....

நம் இதிகாசங்கள் கற்று தந்த
நற்செயல்கள் பல மறந்து விட்டோம்...
"மறதி என்னும் வியாதியை
மாற்றம் என்னும் கிருமி புகுத்தியதால்"
ஆனால்
மறவாமல் மார்தட்டி ஜாதியை மட்டும் வைத்திருப்பது நியாயமோ....

புரிந்து கொள் மனிதா...

"ஜாதியை துறந்தால் சரித்திரம் படைப்பாய்
ஜாதிக்குள் ஒழிந்தால் சகதியில் விழுவாய்"

சிந்தித்து செயல்படு
நாளைய உலகம் ஜாதிகள் இன்றி
சாதனை பல புரியட்டும்
நம் தேசத்தின் புகழ் மேலே வளரட்டும்..."

எழுதியவர் : அரவிந்த் .C (25-Jan-14, 9:51 pm)
பார்வை : 207

மேலே