என் தேடல்
தவம் இருந்து பெற்றோர் பெண்ணை பெத்திட..
தேவதையாய் அவள் வீட்டில் வளர்ந்திட...
வேலைக்காக வேரூர் வந்திட..
ஒரு நாள் தனிமையில் உன் இடம் மாட்டிட...
மிருகம் போல் நீ அவளிடம் நடந்திட...
உன் இடமிருந்து அவள் தப்பிக்க முயன்றிட...
காம வெறியில் நீ வேட்டை ஆடிட..
ஐயோ....!!!பிறந்தாலே உன் கையில் செத்திட.....
அவள் பெற்றோர் கனவுகள் சிதைந்து போயிட...
நீதி கேட்டு அவர் வழக்கு தொடுத்திட...
இதற்கு சாட்சி இல்லை என்று
மனசாட்சி இல்லாமல் அங்கே வழக்கை முடித்திட....
நீயும் இன்பமாய் வெளியே உளவிட..
பல பெண்கள் உனக்கு பலியாகிட....
இந்த நிலை விரைவில் மாறிட..
இளைஞர்கள் உன்னை எதிர்த்து ஒன்று கூடிட...
நீதி என்றும் தழைத்து ஓங்கிட...
எழுதுகிரேன் இந்த பாடல்....
தொடர்கிறது என் தேடல்!!!