புதிய பேருந்து நிலையம்

நிழல் அற்றவர்க்கு
நிழலாகவும்
குடை அற்றவர்க்கு
குடையாகவும்
காட்சி
தரும் அழகிய
இடம்
பள்ளி
குழைந்தைகளின்
அணிவகுப்புகள்
உன் இடத்தில் காணும்
பொழுது
மகிழ்ச்சி
தருகிறதே..!!
கல்லூரி
இளம் வண்டுகளை தேடி
உன்னிடத்தில்
காத்து
கிடக்கும் கல்லூரி
இளம் காளையர்கள்
பல கோடி..!
என்ன
தான் தேட்டமோ
என்ன வித
காரணமோ எல்லாம்
உனக்கே
தெரியும்..!!
புதுமைகளும்
பழமைகளும் நிறைந்த
வாழ்வில்
என்றுமே
உறவாக இருக்கும்
எங்களின்
அழகிய பேருந்து
நிலையமே..
உன்னை
அனுதினமும்
தேடி
வரும் பயணிகளில்
நானும்
ஒருவன்