விலை மகள்
மானத்தை
மறந்து மஞ்சத்தை
உறவாக எண்ணி வாழும்
உயிர்களுக்கு
சந்தோசங்கள்
நிலையற்ற
வாழ்கைகளே...
ஒரு நிமிஷம்
என்னிட
மறந்த ஆடவர்க்கு
இருளில் வெளிச்சம்
தென்படுமோ..
அறியாமை
எனும் உலகில் வாழும்
அறிவீளர்கள்
கடைசியில்
செல்லும் இடம்
நரகமே...
கையில்
இருக்கும் தங்கத்தை
விட்டுவிட்டு
தகரத்தை
வாங்க நினைக்க
எண்ணம் கொண்ட
பேதைகள்
ஏமாற்றம் என்ற
படுகுழியில்
வீழ்கிறார்கள்..!
தடுத்து
நிறுத்துவது யார்
தட்டி கேட்பது
யார்..!
புன்னகையுடன்
வேசமிட்டு
உறவாட நினைக்கும்
காயங்கள்
இல்லாமல் உயிரை
கொண்டு
செல்ல துடிக்கும்
விலைமகளே...
உனது
முடிவை யாரும்
அற்ற
அனாதையாக
இருப்பதை
நீ ஒருநாள் அறியும்
காலம் வெகு
தூரம் இல்லை