தெளிவு

தினம் சாபம் கொடுத்தாலும்
”செத்தொழி நீ” என்றாலும்
எனக்கொன்றும் ஆகாது
உன்சொல்லும் வேகாது.

பிறப்பு தொடக்கம் என்றால்
இறப்பு முடிவாகும்
பிறக்குமுன்பே நிச்சயத்த
பரம்பொருளின் செயலாகும்.

அச்சம் கொள்பவரே
துச்சமாய்ப் பேசிடுவார்
துணிந்து செல்லும் மனிதனுக்கு
பனித்துளியே துன்பம் எல்லாம்.

புதிரான வாழ்க்கையில்
எதிரான மனிதர்கள்
சதிராட்டம் போட்டுத்தான்
தீமைகளை ஈட்டித்தான்
இன்பங்களைத் தேடுவார்.

தம்குறையை அறியாதார்
பிறர் செயலைப் புரியாதார்
குறை சொல்லி வாழ்வதை
குறிக்கோளாய்க் கொள்ளுவார்.

மனத்தூய்மை உள்ளவன்
மாய்மாலம் கண்டவன்
தீமைக்கு அஞ்சியா
பாதையை மாற்றுவான்?

நிலையில்லா வாழ்க்கையில்
நெறிகொன்ற மனிதர்கள்
தடைகளைப் போட்டுத்தான்
தடங்கலைக் காட்டித்தான்
பொறுமையைச் சோதிப்பார்
போறாமையில் பொருமுவார்.

என்வழி நேர்வழி
பாதையில் சரிவில்லை
என்னுடன் வருவது
என்நிழல் மட்டுமே
எனக்கில்லை குழப்பமோ
கிளர்த்திடும் கலக்கமோ.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (30-Jan-14, 12:49 am)
பார்வை : 217

மேலே