எண்ணமே எல்லாமே
அடுத்த வீட்டில்....
அழகாய் பூத்தது மல்லிகை!!
வாசனை எனை அருகில் அழைத்தது !
ஆசை கொண்ட மனசு வாட்டியது!
உடனே மூளை செயலாற்றி
அதை என் இல்லம் சேர்த்திட எண்ணம்!!
பரபரவென செயலாற்றி
வேருடன் பிடுங்கிட எத்தனித்து...
யாரும் இல்லா நேரம்....
வேகம் கொண்டு பிடுங்கிட
பிடுங்கிட பதட்டத்தில்....
பாதியாய் என் கையில் ...
வேறும் இல்லை
மனதில் வேதனையும் இல்லை
காரணமென்ன?
ஆசையை தூண்டிய மல்லிகை அழிந்ததே!!
வேதனை மல்லிகைக்கு...!!
எண்ணி பாருங்கள் எத்தனை மனங்கள் இதுபோல் இவ்வுலகில்
யாரை நோவது!!