இறைபொருள்
![](https://eluthu.com/images/loading.gif)
மிகப் பெரியது இல்லை இறை..
மிகமிகச் சிறுயதில் உள்ளது இறை..
ஒன்றானது இல்லை இறை
ஒவ்வொன்றிலும் உள்ளது இறை..
எங்கோ தூரத்தில் இல்லை இறை
எங்கும் நிறைந்து இருப்பது இறை..
இயக்கிவைத்து பார்ப்பது இல்லை இறை
இயக்கம் எல்லாமே இறை..
கட்டமைத்தது இல்லை இறை
கட்டமைத்துக் கொண்டது இறை..
உருவமற்றது இல்லை இறை
உருவகத்தில் எல்லாம் உள்ளது இறை..
ஒளிந்துகொண்டிருப்பது இல்லை இறை
ஒளியையும் ஒலியையும்
பிரதிபலித்திக்கொண்டிருப்பது இறை..
உலகினை பார்த்துக்கொண்டு
எங்கோ இருப்பது இல்லை இறை
உலகினையே பார்க்க வைப்பதில்
எல்லாம் உள்ளது அந்த இறை..
உயிர் நிலையினை
உருவாக்கியது இல்லை இறை
உயிர் நிலையாய்
உருவானதில் எல்லாம் உள்ளது இறை..
நிறைவானது இல்லை இறை
நிலை இல்லாதது இறை..
நிறமற்றது இல்லை இறை
நிறமானது இறை..
தேட முடியாதது இல்லை இறை
உன்னையும் என்னையும்
தேடிப்பார்க்க வைப்பதில் உள்ளது இறை..
திடமல்ல திரவமுமல்ல
காற்றுமல்ல இறை..
திடமும் திரவமமும்
காற்றுமானது அந்த இறை..
அறியமுடியாதது இல்லை இறை
அரியமுடியாதது இறை..
ஆட்டிவைப்பது இல்லை இறை
ஆடுவது எல்லாமே இங்கு இறை..!!